ARS Engineering Coconut Dehusking Machine
ஏஆர்எஸ் இன்ஜினியரிங் நிறுவனம் தேங்காய் உரிக்கும் இயந்திரம் வெற்றிகரமாக தயாரித்து விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்து வருகிறது.
தேங்காய் உரிப்பது என்பது மிகக் கடினமான, அதிகமாக வேலையாட்களைக் கொண்டு செய்யப்படும் செயல்.
தென்னை மரங்களைப் பொறுத்த வரை தேங்காய் பறிப்பது முதல், அறுவடைக்குப் பின் உள்ள அனைத்து நடவடிக்கைகளிலும் நமக்குப் பெரும் சவால்களை ஏற்படுத்துகிறது.
மக்களின் உழைப்பும், நேரமும் வீணடிக்கப்படுகிறது.
மேலும், பாரம்பரிய முறைப்படி செய்வதற்கு பயிற்சி, திறன் வேண்டியுள்ளது.
இவற்றைக் கருத்தில் கொண்டு, ARS இன்ஜினியரிங், கோயம்புத்தூர், டீஹஸ்கிங் (Dehusking) மெஷின் ARS DS -1 மற்றும் ARS DS-2 எனும் நவீன தேங்காய் உரிக்கும் இயந்திரங்கள் தயாரித்துள்ளது.
7.5 HP & 2 HP மோட்டார் மூலம் இயங்கும் தானியங்கி தேங்காய் மட்டை உரிக்கும் (டீஹஸ்கிங்) இயந்திரத்தை எளிதாக கையாள முடியும்.
தரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது இந்தத் தானியங்கி தேங்காய் உரிக்கும் (டீஹஸ்கிங்) இயந்திரம்.
இந்த அபூர்வமான இயந்திரம் குறைந்த விலையில், அதிக வேகத்தில் தேங்காய் உரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தானியங்கி தேங்காய் உரிக்கும் (டீஹெஸ்கர்) இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 1500 முதல் 1800 வரை தேங்காய்களை உரிக்கும் திறன் கொண்டது.
இந்த இயந்திரம் தென்னந் தோப்புகள், தோட்டங்கள், கூட்டுறவு பண்ணை விவசாயிகள், தேங்காய் வியாபாரிகள், தென்னை விவசாயிகள், தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் தேங்காய் பதப்படுத்தும்
தொழிற்சாலை ஆகியவற்றிற்கு பயனுள்ளதாக இருக்கிறது.
¤ தானியங்கி செயல்பாடுகள்.
¤ உயர் இழுவிசை வலிமை.
¤ வலுவான துரு பிடிக்காத துல்லிய வடிவமைப்பு.
¤ உயர் செயல்திறன்.
¤ குறைந்த மனிதவள சக்தி, அதற்கு பதிலாக மின் சக்தியைக் கொண்டு செயல்படுகிறது.
¤ இது பயன்படுத்த எளிதானது மற்றும் பாதுகாப்பானது.
¤ எவ்வித இடத்திலும் பயன் படுத்தும் விதமாகவும்., ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல ஏதுவாகவும் உருவாக்கப் பட்டுள்ளது.
¤ பல வகையான மற்றும் பல்வேறு வடிவங்களிலான தேங்காய்களை மட்டை உரிக்க ஏதுவாக அமைக்கப்பட்டது.
¤ எளிய மற்றும் குறைந்த செலவு மற்றும் பராமரிப்பு.

விவரங்கள் மற்றும் முக்கிய குறிப்புகள்:
மாதிரி: ARS DS-1., ARS DS-2.
மின் திறன்: 2 HP., 7.5 HP.
