ARS இன்ஜினியரிங் நிறுவனம் பற்றி:

...

2006 ஆம் ஆண்டில் ARS இன்ஜினியரிங் நிறுவப்பட்டது, சிறந்த வாடிக்கையாளர்களைக் கொண்டும் மற்றும் திருப்திகரமான சேவை மூலமும், வெற்றிகரமாக இயங்குகிறது நமது ஏஆர்எஸ்.

நாம் தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரங்கள், இளநீர் உரிக்கும் இயந்திரங்கள் மற்றும் ரப்பர் பேண்ட் உற்பத்தி இயந்திரங்களை உற்பத்தி செய்வதோடு ஏற்றுமதியும் செய்து வருகிறோம்.

ஏஆர்எஸ் என்ஜினீயரிங் தானியங்கி தேங்காய் உரிக்கும் டீஹஸ்கிங் மெஷின், பகுதி தானியங்கி (Semi-automatic) இளநீர் உரிக்கும் இயந்திரம், ரப்பர் பேண்ட் கட்டிங் மெஷின், ரப்பர் பேண்ட் டிப்பிங் மெஷின், ரப்பர் பேண்ட் டிரையர்/ உலர் இயந்திரம், ரப்பர் பேண்ட் கெமிக்கல் கலவை இயந்திரம், ரப்பர் பேண்ட் கிளீனிங் மெஷின், ரப்பர் பேன்ட் பிளெண்டர் மெஷின் முதலியனவை உற்பத்தி செய்கின்றது.

ஏஆர்எஸ் இன்ஜினியரிங் இந்த தயாரிப்புகளைத் தரமாகவும், நியாயமான விலையிலும் வழங்குகிறது.

எங்கள் வாடிக்கையாளர்களுடனான நீண்டகால வணிக உறவுகளைக் கருத்தில் கொண்டு, எமது ஊழியர்களுக்கு காலவரையறை அற்ற சிறந்த பயிற்சிகளை வழங்குகிறோம்.
நவீன முறையில், உற்பத்தி செயற்பாடுகளில், பல உத்திகளைக் கையாண்டு, தரவரிசைகளையும் செயல்படுத்துகிறோம்.

ARS இன்ஜினியரிங் Six Sigma Principles பின்பற்றுவதோடு
தரத்தை மேம்படுத்துவதற்கு LEAN முறைகளையும் செயல்படுத்துகிறது.

விற்பனைக்குப் பின் தொடர் சேவை(After sales) செய்வதாலும், பின்னர் சரியான நேரத்தில் இயந்திரங்கள் மறுசீராய்வு செய்வதாலும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து மீண்டும் மீண்டும் ஆர்டர்களைக் கொண்டு மேன்மேலும் வளர்ந்து வருகிறது நமது ஏஆர்எஸ் இன்ஜினியரிங்.
ஆகையால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.